தொழில்நுட்ப தகவல்கள் பெற இங்கே லைக்கு செய்து கொள்ளவும்

Thursday, 20 October 2016

06:வேற்று கிரக வாசிகள் பற்றிய உண்மைகள் அறிந்து கொள்ளலாம் பகுதி ஆறு

வேற்று கிரக துணை


இந்த கட்டுரை நமது உலகிற்கு வெளியே வேற்று கிரகவாசிகள் என்று இருக்கிறார்களா என்பதை நிருபிக்க முயற்சிக்கிறது.

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம் என்றே பதில் கூறுகிறார்கள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கதைகளை  கூறுகிறார்கள்.

ஆனால் வேறு கிரகவாசிகள்  இருக்கிறார்கள் என்பதை எவ்வாறு நிரூபிப்பது. நல்லது . இந்த பிரச்சினைக்கு இவ்வாறு தீர்வுகாணலாம்.புதிய கணக்கெடுப்பின் படி பூமி மேற்பரப்பில்  87 லட்சம் உயிர் இனங்கள் உள்ளன என கணக்கிடபட்டு உள்ளது.  இதில் 66  லட்சம் உயிர் இனங்கள் பூமியின் நிலபரப்பில் உள்ளன.22 லட்சம் இனங்கள் கடல்களில் உள்ளன. 

இந்த பிரபஞ்சத்தில் 5 ஆயிரம் கோடி விண்மீன் திரள்கள்(galaxies)  உள்ளன. இந்த மிகப்பெரிய பால்வெளியில் வாழ தக்க கிரகங்கள் 10,000 கோடி உள்ளன. இதில் ஏதாவது ஒரு பகுதியில் எங்காவது  ஜீவராசி உள்ளது என்று பொருள். பிரபஞ்சத்தில் 50 செக்ஸ்டில்லியன் (50,000,000,000,000,000,000,000)  கிரகங்கள் உள்ளன. அவைகளில் ஏதாவது ஒன்றில் வேற்று கிரக வாசிகள் வாழ சரியான நிலைமைகள் இருக்க வாய்ப்பு  உள்ளது.எனவே இந்த பிரபஞ்சத்தில் நாம் வாழும் பூமி மிகச்சிறிய நீல புள்ளிதான்.

50 செக்ஸ்டில்லியன் கிரகங்களில் ஏதாவது ஒன்றில்  வேற்று கிரகவாசிகள் இருப்பார்கள் என்று அனுமானித்தாலும் அவர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பார்கள்.ஒரு வேளை அவர்கள் நம்மை விட அதிக பரிணாம வளர்ச்சியை அடைந்து இருக்கலாம்?

அதற்கு சில உதாரணங்களை நாம் பார்க்கலாம்


நாம் நமது நேரம் மற்றும் நோக்கங்களுக்காக கடந்த 200 ஆண்டுகளாக நமது சொந்த மனித இனத்தின் வளர்ச்சிபாருங்கள்.கடந்த 1815 முதல் இப்போது வரை உள்ள வளர்ச்சியை கணக்கிட்டு பாருங்கள். அப்போது விமானங்கள் இல்லை, விண்வெளி ஆய்வு மையம் இல்லை. கண்டிப்பாக ஐபோனும் இல்லை.

நாம் இந்த காலங்களுக்குள் அதிக வளர்ச்சியை அடைந்து உள்ளோம். இப்போது ஒரு நொடி கற்பனை செய்து பாருங்கள், ஒரு வேளை பூமியை போன்ற வளம் உள்ள ஒரு கிரகம் இருந்தால். அந்த கிரகத்தில் உள்ள ஜீவராசிகள் இருந்திருந்தால் நினைத்து பாருங்கள்.

தாமஸ் ஹேர் என்ற விஞ்ஞானி  கூறும் போது :-

வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறும் இருக்கிறது. ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம். அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை, அப்படி யாராவது எங்காவது இருந்தால் நம்மை கண்டுபிடிப்பதும் சிரமம் அல்ல. அவர்களது இடத்தில் இருந்து பயணிக்க தொடங்கியிருந்தால் 500 ஆண்டுகளிலேயே நம்மை அடைந்திருக்கலாம். அதுபோன்ற சம்பவம் இதுவரை நடக்கவில்லை. அதனால், அனேகமாக அதுபோல யாரும் இல்லாமல் இருக்கலாம். அல்லது, நம்மை கவனிக்காமல் அவர்கள் கடந்துபோயிருக்கலாம். அல்லது, எங்கும் பயணப்படாமல் அவர்கள் தங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பவர்களாகக்கூட இருக்கலாம். மேலும், வேற்று கிரக வாசிகள் இருந்தால் அவர்களை பார்த்து பயப்படவும் அவசியம் இல்லை. அவர்கள் எல்லா வளங்களும் நிறைந்தவர்களாகத்தான் இருப்பார்கள். பூமியில் இருந்து தண்ணீரோ, வேறு எதுவுமோ அவர்கள் எதிர்பார்க்கப் போவதும் இல்லை. என்று கூறுகிறார்.



Posted by அருண் கோல்டன்

0 comments:

Post a Comment