
வேற்று கிரக வாசி துணை
பூமியில் வாழும் ஜீவராசிகளைத் தவிர, பிற கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா என்ற கேள்வி காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து நடைபெற்று வரும் ஆய்வுகள், வேற்று கிரக உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியங்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றன. எனினும் இன்று வரை உறுதியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆதாரங்கள் எப்போது கிடைக்கும் என்பதும் நமக்குத் தெரியாது. எனினும், வேற்றுகிரக ஜீவராசிகள் உருவாவதற்கும், வாழ்வதற்கும் உள்ள சூழல் குறித்து அறிவுஜீவியான ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் தன்னுடைய இயற்பியல் மற்றும் பிரபஞ்ச அறிவைப் பயன்படுத்தி வேற்று கிரக உயிரினங்கள் எப்படியிருக்கும் என்று தர்க்க ரீதியில் விளக்குகிறார். நமது அறிவை தட்டி எழுப்பும் அவரது கருத்துக்களின் சாராம்சம் இதோ:
வேற்று கிரக உயிரினங்கள் நட்சத்திர மண்டலங்களுக்குள் இருக்கலாம். அல்லது பிரபஞ்சத்தின் மேகக்கூட்டங்கள் போன்ற பகுதிகளில் நுண்ணுயிர்களாக இருக்கலாம். கண் இமைக்கும் நேரத்தில் வாழ்ந்து மறைந்துவிடக் கூடிய நுண்ணுயிரிகள் கூட இருக்கலாம். ஆகவே பிரபஞ்சத்தில் உயிரினங்களில் எதைத் தேடுவது எங்கு தேடுவது என்ற கேள்விகள் முக்கியமானவை.பிரபஞ்சத்தில் இயற்பியல் விதிகள் எல்லாம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், உயிர் வாழ்க்கைக்கான விதிகளும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். அப்படியானால் நாம் வாழும் இந்த தாய் பூமியில் உயிரினம் தோன்றியது பற்றி நாம் அறிந்து கொண்டால், இந்த தேடலைத் தொடங்க முடியும்.45 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு எது காரணமாக அமைந்தது என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. ஆனால் இங்கு அபரிமிதமாக இருந்த அமினோ அமில குட்டைகளில், அணு மூலக்கூறுகள் ஒரு கச்சிதமான ஒருங்கிணைவு நிகழும் வரை ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருந்தன. பிறவி எனும் ஓர் உயிர் தோன்றும் வரை இந்த மோதல்கள் நடந்தன. எந்த தூண்டலும் இன்றி, உயிர் தோன்றியிருக்க முடியுமா என்பது தெரியவில்லை.பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்பாக, வேற்று கிரகங்களில் தோன்றிய உயிர்கள் இங்கு பரவியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. பூமியில் விழுந்த கற்களின் இடைப்பகுதியில் அந்த உயிரினங்கள் இருந்து, இங்கு வந்து சேர்ந்திருக்கலாம். அந்த உயிரினங்கள் விண்வெளியின் வெப்பத்தையும், வெற்றிடத்தையும் தாங்கும் திறனைப் பெற்றிருந்திருக்கும்.உயிர் தோன்றிவிட்டால், அதற்கடுத்து உள்ள அம்சம், உயிர் வாழ்தல். உயிர் வாழ்தலுக்கு ஓர் ஆதாரம் தேவைப் படுகிறது. அதை நாம் உணவு என்கிறோம். ஒருமுறை ஊட்டம் பெற்ற உயிர், அடுத்து சூழ்நிலைக்கு ஏற்ப வாழ தன்னை மாற்றிக் கொள்கிறது. இனப் பெருக்கம் செய்கிறது. பரிணாம வளர்ச்சிக்கும் வித்திடுகிறது. பரிணாம வளர்ச்சி என்பது பூமிக்கு மட்டும் பொதுவானது அல்ல. அது வேற்றுகிரகவாசிகளுக்கும் பொதுவானது. வேற்று கிரகங்களில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டால் அங்கு, ஜீவராசிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு இந்த பிரபஞ்சத்தில் அபரிமிதமாக உள்ள தண்ணீர் நல்ல பதில் அளிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. தண்ணீர் இருந்தாலும் அந்த கோளின் இருப்பிடம், அதிக வெப்பம் மற்றும் குளிர் இல்லாத இடங்களாக இருக்க வேண்டும். அப்படியானால், சூரியனைச் சுற்றி உள்ள இரு கோள்களான பூமி மற்றும் செவ்வாய் அந்த வாய்ப்பைப் பெறுகின்றன. 1970களிலிருந்து மனிதர்கள் செவ்வாயை ஆராய்ந்து கொண்டிருந்தாலும், அங்கு உயிர் இருப்பதை உறுதி செய்யவில்லை. நாசா தண்ணீருடன் இணைந்த ஓர் வெண்ணிற உப்பை கண்டறிந்தது. உயிர் வாழ்வதற்கான ஈரப்பதம் அங்கு இருக்கிறது. ஆகவே அந்த முயற்சியை விஞ்ஞானிகள் கைவிடமாட்டார்கள்.
இதைத் தவிர நமது சூரிய குடும்பத்தில், உயிர் இருப்பதாகக் கருதக்கூடிய இன்னொரு இடம் வியாழன் கோளை சுற்றி வரும் துணைக்கோளான ஐரோப்பா. இது 3,200 கி.மீ., விட்டமும் மைனஸ் 260 டிகிரி குளிர்நிலையும் கொண்ட சிறிய துணைக் கோள். இக்கோள் சுற்றிவரும் பாதை வட்ட வடிவமாக இருப்பதால், வியாழனின் ஈர்ப்பு விசையால் துணைக்கோளின் இயக்கத்தின் போது, உள்புறமாக வெப்பம் உருவாகியிருக்கலாம். அதனால், பனிக் கட்டிகளுக்கு கீழே கடல் இருக்கலாம். அங்கு வாழத்தகுந்த உயிரினங்கள் உருவாகியிருக்கலாம். நமது ஆழ்கடல் உயிரினங்களைப் போல் அங்கு உயிரினங்கள் இருக்கலாம். அங்கு மேம்பட்ட உயிர்கள் வாழ்ந்தாலும், அவை அவற்றுக்கு மேலே 25 கி.மீ., பனி உறைந்த நிலையில் இருப்பதால், அவற்றுக்கு பிரபஞ்சம் இருப்பது தெரியாது. அவர்கள் நம்முடன் தொடர்பும் கொள்ள மாட்டார்கள்.நமது சூரிய மண்டலத்தைத் தவிர வேறு இடங்களில் உயிர்கள் இருக்கிறதா என்பதையும் நாம் தேட வேண்டும். 1995ம் ஆண்டில் முதலில் ஒரு வேற்று கிரகம் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட கோள்கள் கண்டறியப்பட்டுவிட்டன.
அந்த கோள்களில்

அந்த கோள்களில் திரவ வடிவில் தண்ணீர் இருக்கலாம். பரிணாமத்தின் சக்தியால் அங்கு வேற்றுகிரக ஜீவராசிகள் நமக்கு அறியப்பட்டவைப் போலக் கூட இருக்கலாம்.தரையில் வாழக்கூடியவையாக இருந்தால் அவற்றுக்கு கால்கள் இருக்க வேண்டும். கண்கள் அமைந்திருந்தால் அது பூமியில் உள்ள ஜீவராசிகளை ஒத்த அமைப்பை உடையதாக இருக்கும். பரிணாமத்தின் உச்சகட்ட எல்லைகளை நம்மால் உணரமுடியாது.
வேற்று கிரக வாசிகள் நம்மவர்களை கடத்திச் செல்வதாக நிறையக் கதைகள் வந்திருக்கின்றன. ஆனால், அவர்கள் ஏன் நம்மைக் கடத்த வேண்டும். நாம் 40 ஆண்டுகளாக விண்வெளியை கவனித்துக் கொண்டிருக்கிறோம். ஒரே ஒரு மர்மமான வாய்ப்பைத் தவிர, வேறு எந்த அறிகுறியையும் வேற்று கிரகவாசிகளிடம் இருந்து நாம் பெறவில்லை. 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி ஒஹயோவில் இருக்கும் ஒரு ரேடியோ டெலஸ்கோப் ஒரு சமிக்ஞையை கிரகித்தது. ஒரு கம்ப்யூட்டர் 6 எழுத்துக்களும் எண்களும் கொண்டதாக அதை பதிவு செய்தது. ஆங்கிலத்தில் இது “வாவ்’ என்று அறியப்பட்டது. இது வேற்று கிரகவாசிகள் இந்த சமிக்ஞை அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இந்த “வாவ்’ சமிக்ஞை 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திர மண்டலத்திலிருந்து வந்ததாக தோன்றியது.அதற்கு நாம் ஒரு பதில் அனுப்பினால் அது அவர்களை சென்றடைய 200 ஆண்டுகள் ஆகும். அந்த காலத்திற்குள் அவர்கள் தகவல் அனுப்பியதே மறந்து அதற்கு பதில் வருகிறதா என்று கவனிப்பதையே விட்டுவிடுவார்கள். அதை விட மோசமாக அவர்கள் தங்களையே அழித்துக் கொண்டும் விடலாம். மனித இனம் மிக விரைவாக அணுகுண்டின் சக்தியை கண்டறிந்து கொண்டது. அதே விஷயம் அந்த வேற்று கிரகவாசிகளின் விஷயத்திலும் நடந்தால் அவர்களும் நீண்ட நாள் வாழமுடியாது. வேற்றுகிரகவாசிகளை தேட, நாம் அவர்களது செய்திகளை கவனிக்கலாம். அல்லது நாம் பேசத்தயாராக இருப்பதாக நம்முடைய ஆர்வத்தை ஒலிபரப்பு செய்யலாம்.
ஆனால் நாம் என்ன சொல்ல போகிறோம் என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் முதுமை அடைவதை வெற்றிகொண்டு சாகா நிலைமையை கூட அடைந்திருக்கலாம். அதற்கும் மேலாக இந்த மேம்பட்ட நிலையை அவர்கள் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே அடைந்திருக்கலாம். இது நடக்காது என்று தோன்றினாலும், நீங்கள் இதை தர்க்க ரீதியாக சிந்தித்தால், ஒரு குகைவாசிக்கு அல்லது ஆதிவாசிக்கு ராக்கெட் விண்கலம் எப்படியோ அப்படி அவர்களுடைய தொழில்நுட்பமும் நமக்கு இருக்கும். அவர்கள் வாழும் கிரகங்களுக்கு ஆபத்து வரும் போது, அல்லது அவர்கள் கிரகங்களில் வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் போது, அவர்கள் மற்ற கிரகங்களில் உள்ள தண்ணீர் உள்ளிட்ட இயற்கைப் பொருட்களை பிரம்மாண்டமான விண்வெளிக் கப்பல்களுடன் வந்து அவர்கள் சூறையாடலாம். எனவே நாம் காலத்தை வெல்லும் வயதை அடைவதையும், வேற்று கிரகங்களில் சென்று குடியேறும் அளவுக்கான திறமையும் ஒரு காலத்தில் நாமும் பெற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
Thursday, 13 October 2016
5:வேற்று கிரக வாசிகள் பற்றிய உண்மைகள் அறிந்து கொள்ளலாம் பகுதி ஐந்து
4:வேற்று கிரக வாசிகள் பற்றிய உண்மைகள் அறிந்து கொள்ளலாம் பகுதி நான்கு

வேற்று கிரக வாசி துணை
செவ்வாய் கிரகத்தில் ஆதி தமிழர்கள் !
வேற்றுகிரக வாசிகள் பூமியை அடிக்கடி சந்திரன், செவ்வாய் கிரகங்களில் இருந்து உளவு பார்க்கிறார்கள் (இதை பற்றி என்னுடைய 2012 இல் உலகம் அழியுமா என்ற பதிவில் இதை பற்றி தெளிவாக கூறியிருக்கிறேன்), பூமிக்கு வந்திருக்கிறார்கள், வசிக்கிறார்கள்(இதை பற்றி மேலும் அறிய உலகில் மறைக்கப்படும் உண்மைகள்).
ஆதி காலத்து உலக வரைபடம் வேற்று கிரக வாசிகளின் கூற்று படியே வரையபட்டிருக்கவேண்டும் பூமிக்கு உயர சென்று பார்க்காமல் தெளிவாக துல்லியமாக வரையபட்டிருப்பது அவர்கள் உதவி இன்றி சாத்தியம் இல்லாத ஒன்றே, இன்னும் பல கூற்றுகள் வேற்று கிரக வாசிகள் பற்றி ஆதிகாலத்திலிருந்து இன்று வரை இருந்துகொண்டு தான் இருக்கின்றன. ஆனால் இவை எல்லாம் பொய் என்று கூறுபவர்களும் உண்டு.
இதில் என்னுடைய கருத்து என்னவென்றால் கோடானகோடி நட்சதிரகூட்டங்களை கொண்ட இப்பிரபஞ்சத்தில்
சூரியன் ((பிரபஞ்சம் சூரியன் பூமி பற்றி மேலும் தகவல்களுக்கு என்னுடைய பதிவை படிக்க இங்கே கிளிக் செய்யவும்) ) என்னும் சிறு நட்சத்திரத்தில் உள்ள
(இது போன்று பல படங்கள் உள்ளன பதிவின் நீளம் கருதி குறைதுக்கொள்ளவேண்டியாகிவிட்டது. )
கண்ணுக்கு தெரியாத சிறு சிறு பூமி என்னும் கோளில் மனிதன் என்னும் ஒரு ஏலியன் வாழும் போது இப்பிரபஞ்சத்தில் நம்மை போல் அல்ல நம்மை விட அதியுயர் அறிவு கொண்ட ஏலியன்கள் வாழ்வது சாத்தியமே.
அதற்கு சாட்சியாகவே சமீபத்தில் ஒரு நிகழ்வும் நடந்துள்ளது
பூமியில் இருந்து, 57 கோடி கி.மீ., தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய சூழல் குறித்து ஆராய, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான, "நாசா' சார்பில் "கியூரியாசிட்டி ரோவர்' விண்கலம் அனுப்பப்பட்டது.
(இதை பற்றிய மேலும் தகவல்களுக்கு செவ்வாயில் கால் பதித்த கியூரியாசிட்டி) செவ்வாயின் சுற்றுச்சூழல் அமைப்பு, பாறைகள் மற்றும் மண்ணுக்கு அடியில் ஹைட்ரஜன் அளவு போன்ற பல்வேறு அம்சங்களை ஆராய, 10 உபகரணங்களுடன் கடந்த, 6ம் தேதி செவ்வாயில் தரையிறங்கிய, "கியூரியாசிட்டி' திட்டமிட்டபடி, தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது.
முதல்கட்டமாக, செவ்வாயின் நிலப்பரப்பை பல்வேறு திசைகளில் இருந்து படம் பிடித்து, பூமிக்கு அனுப்பியது.செவ்வாய் கிரகத்தின் அடிவானத்தில், மர்மமான யு.எப்.ஓ., எனப்படும் அடையாளம் காண முடியாத புதிரான பொருள், அங்குமிங்கும் அசைந்தாடுவதை, "கியூரியாசிட்டி' படம் பிடித்துள்ளது.
வேற்று கிரகவாசிகள் தான், செவ்வாயில் மனிதனின் நடவடிக்கைகளை வேவு பார்ப்பதாக, யூ.எப்.ஓ., ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இது, வழக்கமாக கிராபிக் தொழில்நுட்பத்தில் காணப்படும், "டெட் பிக்சல்'கள் என, சில விஞ்ஞானிகள் விளக்கம் தருகின்றனர்.வேற்று கிரகவாசிகள் மற்றும் விண்வெளியில் உள்ள அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பொருட்கள் குறித்து ஆய்வு செய்து வரும், பிரிட்டனைச் சேர்ந்த, "அலீன் டிஸ்க்ளோசர்' அமைப்பின் ஸ்டீபன் ஹன்னார்டு என்பவர்,
சமீபத்தில், "கியூரியாசிட்டி' அனுப்பிய படத்தில், செவ்வாயின் அடிவானத்தில் அடையாளம் காண முடியாத, பறக்கும் தட்டு போன்ற ஒரு மர்மப் பொருள், வெள்ளை நிறத்தில் அங்குமிங்கும் பறந்து திரிவதை ஹன்னார்டு கண்டுபிடித்துள்ளார்.அவர் கூறுகையில்,
""கியூரியாசிட்டி' அனுப்பிய வீடியோவில், செவ்வாய் கிரகத்து வானில் நான்கு பொருட்களை காண முடிகிறது. செவ்வாயில், புவிகிரகவாசிகளின் நடவடிக்கைகளை வேற்று கிரக சக்திகள், பறக்கும் தட்டுகளின் மூலம் வேவு பார்ப்பதையே "கியூரியாசிட்டி'யின் வீடியோ பதிவுகள் காட்டுவதாக, யூ.எப்.ஓ., ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. கியூரியாசிட்டி அனுப்பியிருக்கும் மர்ம பொருள் வேற்றுகிரகவாசிகளின் வேவு கப்பல்களாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆக மனிதனோடு பஞ்சாயத்துக்கு மல்லுக்கட்ட வேற்றுக்கிரகவாசிகள் தயாராகிவிட்டார்களோ?
கியூரியாசிட்டி ரோவர் பற்றி மேலும் சில தகவல்கள்:
*செவ்வாயில் தரையிறங்கிய இடத்தில் இருந்து, ஆறு மீட்டர் தூரத்துக்கு, "கியூரியாசிட்டி ரோவர்' நகர்ந்து சென்று, ஆய்வுகளை செய்துள்ளது
*ஒரு டன் எடை கொண்ட இந்த கியூரியாசிட்டி விண்கலம்தான் இதுவரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப்பட்ட விண்கலங்களிலேயே பெரியதாகும்.
* 8 மாத கால பயணத்தை முடித்து பத்திரமாக செவ்வாய் கிரகத்தில் லேண்ட் ஆகியுள்ள இந்த விண்கலம் அடுத்த 2 ஆண்டு காலத்திற்கு செவ்வாய் கிரகத்தை அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து அனுப்பப்போகும் படங்களும், வீடியோக்களும், ஆய்வுத் தகவல்களும் மனித குலத்தை மாற்றிப் போடப் போகும் முக்கிய விஷயமாகும்.
* 2030 ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை ஏற்கனவே அமெரிக்கா அறிவித்துள்ளது. அதற்கான திட்டமிடல்களும், ஆய்வுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. எனவே கியூரியாசிட்டி தரப் போகும் தகவல்கள் மிகுந்த ஆர்வத்தையும்,
மிகுந்த ஆர்வத்தையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன.
* செவ்வாய் கிரகத்தில் இறங்கியபோது தனது நிழல் கிரகத்தின் தரையில் படிந்ததை படம் எடுத்து அனுப்பியுள்ளது கியூரியாசிட்டி. இது அந்த விண்கலத்தின் நிழல் அல்ல, மாறாக மனித குலத்தின் சாதனை நிழல் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
* ஏற்கனவே மார்ஸ் ஸ்பிரிட், ஆப்பர்சூனிட்டி என இரு விண்கலங்களை செவ்வாய்க்கு நாசா அனுப்பியுள்ளது
மறக்காமல் கருத்துக்களை இட்டு செல்லுங்கள்
3: வேற்று கிரக வாசிகள் பற்றிய உண்மைகள் அறிந்து கொள்ளலாம் பகுதி மூன்று

வேற்று கிரக வாசி துணை
நாற்பது ஆண்டுகளுக்கும் முன்னால் அப்போலோ விண்கலத்தில் நிலவுக்கு சென்றிருந்த விண்வெளி வீரர்கள் எடுத்துவந்த நிலவுப் பாறைகளில் இரசாயன ஆய்வுகளை மேற்கொண்ட ஜெர்மானிய விஞ்ஞானிகள் இதனைத் தெரிவிக்கின்றனர்.
நானூற்றைம்பது கோடி ஆண்டுகள் முன்பாக பூமியின் மீது வேறு ஒரு கிரகம் வந்து பூமியின் மீது பயங்கரமாக மோதியது என்பதும், அப்படி மோதிச் சிதறிய சிதறல்கள் தான் பூமியைச் சுற்றி ஒன்றுதிரண்டு நிலவு உருவானது என்பதும்தான் 1980கள் முதல் விஞ்ஞானிகள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடாக இருந்துவருகிறது.
சூரிய குடும்பமும் உருவான விதம் தொடர்பான சாத்தியக்கூறுகளை கணினிகள் மூலமாக அனுமானித்தபோதும் நிலவு உருவானதற்கு பொருந்திவரக்கூடிய விளக்கமாக இதுதான் இருந்துவருகிறது.
தியா
ஆனால் இந்த கோட்பாட்டுக்கு தடய பூர்வ ஆதாரம் எதுவும் அதற்கு இதுவரை இல்லாமல் இருந்துவந்தது.
அப்படி வந்து மோதியதாக கருதப்படும் கிரகத்துக்கு கிரேக்க புரானத்திலிருந்து எடுத்து தியா என்ற ஒரு பெயரை விஞ்ஞானிகள் கொடுத்திருந்தார்கள்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நிலவுப் பயணம் சென்று அங்கிருந்து பாறைகளை எடுத்து வந்த பின்னர் அதில் செய்யப்பட்டிருந்த ஆய்வுகளை வைத்து, நிலவுப் பாறைகள் முழுக்க பூமியிலிருந்து சென்றவைதான் - அதாவது பூமிப் பாறைகளில் காணப்படும் இரசாயன மூலக்கூறுகளும் அடையாளங்களும்தான் அந்த பாறைகள் முழுமையிலும் தென்பட்டதாக கருதப்பட்டது.
ஆக்ஸிஜன் ஐசடோப்
ஆனால் மேலும் நூதனமான ஆய்வுகளை தற்போது நிலவுப் பாறைகளில் மேற்கொண்டபோது, பூமிப் பாறைகளின் இரசாயன கூற்றுக்கு சம்பந்தமில்லாத வெளிக்கிரக தோற்றத்துக்கான அடையாளங்கள் நிலவுப் பாறைகளில் தெரிவதாக ஜெர்மனியிலுள்ள கொயெடிங்கென் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பூமிப் பாறைகளுக்கும் நிலவுப் பாறைகளுக்கும் இடையில் சிறு வித்தியாசம் இருப்பதை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாகவும், இரண்டு கிரகங்கள் மோதிக்கொண்ட கோட்பாட்டை ஆதரிப்பதாக இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ளதென்றும் ஆய்வை வழிநடத்திய டாக்டர் டேனியல் ஹெர்வார்ட்ஸ் கூறினார்.
பாறைகளில் காணப்படும் ஆக்ஸிஜன் ஐசடோப்களுடைய கலவைகளுக்கிடையில் வித்தியாசங்களை அளந்து டாக்டர் ஹெர்வார்ட்ஸ் இந்த ஆய்வை செய்துள்ளார்.
பூமிப் பாறைகளில் ஆக்ஸிஜன் ஐசடோப்களுடைய கலவை ஒரு விதமாகவும், நிலவுப் பாறைகளில் அது வேறு விதமாகவும் இருப்பதாகவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் நிலவுப் பாறையில் வேற்று கிரக தோற்றத்தைக் குறிக்கக்கூடிய அந்த வித்தியாசம் மிகக் குறைவாகவே தென்படுகிறது.
எனவே வேற்று கிரகம் பூமியின் மீது மோதியதென்ற கோட்பாடு சரியாக இருக்குமா என்று சில விஞ்ஞானிகள் இப்போதும் ஐயம் எழுப்புகின்றனர்.
2:வேற்று கிரக வாசிகள் பற்றிய உண்மைகள் அறிந்து கொள்ளலாம் பகுதி இரண்டு

வேற்று கிரக வாசி துணை
வேற்றுகிரக வாசிகளை வேட்டையாடும் முனைபில் நாசா !!
வேற்றுகிரக வாசிகள் பற்றி ஆயிரம் ஆயிரம் கதைகள் உண்டு. அந்த கதைகள் - உண்மை, பொய், கற்பனை, கட்டுக்கதை, சாட்சி, ஆதாரம், நம்பிக்கை, சந்தேகம் என்று - பல வகைகளில் பிரித்து பார்க்கப்படுகின்றன..!
அளவில் அடங்காத இவ்வளவு பெரிய அண்டத்தில் பூமி என்ற ஒரு கிரகத்தில் மட்டும் தான் உயிரினங்கள் உள்ளது என்பதை பெரும்பாலோனர்கள் ஏற்றுக்கொள்வதாய் இல்லை.
முக்கியமாக, ஸ்டீபன் ஹோக்கிங் போன்ற அண்டவியல் அறிஞர்கள் மற்றும் எல்லன் ஸ்டோஃபன் போன்ற நாசா விஞ்ஞானிகள், ஏலியன்கள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வதாய் இல்லை..!
ஏலியன் வேட்டை : வேற்றுகிரக வாசிகள் பற்றிய நிஜமான முதல் ஆதாரத்தை கண்டுபிடிக்கும் முனைப்பில், நாசா ஒரு பெரிய ஏலியன் வேட்டையையே நடத்திக் கொண்டிருக்கிறது என்பது மேற்க்கண்ட தகவல்கள் மூலம் உறுதியாகிறது..!
வரலாற்று பெருமை : ஏனெனில் முதலில் நிலாவிற்கு சென்ற நாடு, முதலில் செவ்வாய்க்கு சென்ற நாடு என்ற வரிசையில், முதலில் ஏலியன்களை கண்டுபிடித்த நாடு என்ற வரலாற்று பெருமையை அடைய ஒவ்வொரு நாடும் முயற்சிப்பதில் தவறு ஒன்றுமில்லை..!
நாசா முயற்சி : அப்படியாகிய அந்த பந்தயத்தில், சூப்பர் பவர் நாடான அமெரிக்காவின் நாசா (NASA) பெரும் முயற்சிகளை எடுத்து வைக்க இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன..!
உறுதி : 2025-ஆம் ஆண்டுக்குள் ஏலியன்கள் சார்ந்த அறிகுறிகளை நாசா நிச்சயமாக கண்டறியும் என்று நாசாவின் உயர்நிலை விஞ்ஞானியான எல்லன் ஸ்டோஃபன் உறுதியாக தெரிவித்துள்ளார்..!
உயிரினங்கள் : நாசா குழு, அண்டத்தில் வாழும் உயிரினங்கள் பற்றி மிகவும் பலமான ஆதாரங்களை திரட்ட இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்..! எங்களுக்கு தெரியும் : மேலும் எங்கே ஏலியன்களை தேட வேண்டும், எப்படி தேட வேண்டும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும் என்றும் சுட்சமமாக தெரிவித்துள்ளார், எல்லன்..!
தொழில்நுட்பம் : பெரும்பாலான ஏலியன் சார்ந்த தேடல்களுக்கு எங்களிடம் அதிநவீன தொழில்நுட்பம் உள்ளது மேலும் அதை கொண்டு நாங்கள் தீவிரமான தேடல் பணியில் இறங்க இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆய்வு : 2020-ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட உள்ள நாசாவின் அடுத்த மார்ஸ் ரோவர் முழுக்க முழுக்க வேற்றுகிரக வாசிகள் பற்றிய ஆய்வை அண்டவெளியில் நிகழ்த்த உள்ளதாம்..!
1;வேற்று கிரக வாசிகள் பற்றிய உண்மைகள் அறிந்து கொள்ளலாம் பகுதி ஒன்று

வேற்று கிரக வாசி துணை
ஏலியன்கள் எனப்படும், வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு பெரும்பாலான விஞ்ஞானிகள் ஆம் என்றே பதில் கூறுகிறார்கள்.
தற்போது வேற்றுக்கிரக வாசிகளின் வாழ்விடம் 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வீடியோவில் பூமியை போலவே சுற்றுச்சூழல் ஆதாரம் காணப்படுகின்றது.
ஒரு குள்ள சிவப்பான நட்சத்திரமும் அதனைச் சுற்றிகிற பூமியைவிட சற்று பெரியதுமான மூன்று கிரகங்களும் அண்டவெளியில், கடந்த மே மாதத்தில் வானியல் வல்லுநர்களால் கண்டுபிடிக்கப்பட்டன.
ஒன்றுக்கொன்று வெகுதூரங்களில் காணப்படும் மூன்று கிரகங்களில். நட்சத்திரத்துக்கு மிக அருகாமையில் உள்ள இரண்டு கிரகத்தில், நம் பூமியில் உள்ளது போன்ற பாறைகளும் சுற்றுச்சூழலும் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ப அமைந்திருக்கிறது.
அதனால், அங்கிருந்துதான் வேற்றுக்கிரக வாசிகள் என்று நாம் கூறிவரும் விவரிக்க முடியாத அமைப்புகொண்ட பறக்கும் தட்டுகளில், பூமிக்கு வந்து செல்லும் மர்ம இனம் வாழக்கூடும் என முடிவுசெய்துள்ளனர்.
இதை ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் பார்த்து, உறுதி செய்துள்ளனர்.

அந்த நட்சத்திரத்திற்கு ட்ராப்பிஸ்ட்-1 என பெயரிட்டுள்ளனர். அதைச் சுற்றும் கிரகங்களும் முன்பே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் ஆய்வுகள் தொடர்ந்த நிலையில், இப்போழுதுதான் ட்ராப்பிஸ்ட்- 1 க்கு மிக அருகில் உள்ள கிரகத்தில், பூமியில் அமைந்திருப்பது போல, உயிர்கள் வாழக்கூடிய பாறை நிலங்களும், சிறிய சுற்றுச்சூழலும் காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது செவ்வாய் கிரகத்தோடு ஒப்பிடுகையில், சராசரியாக அதன் சுற்றுவட்டப்பாதையை விட, 12.5 ஒளி நிமிடங்கள் தூரத்தில் உள்ளது. மேலும், அந்த கிரகம் நம் பூமியைவிட தோராயமாக மூன்று மடங்கு பெரியதாகவும் உள்ளது. இந்த கண்டுபிடிப்பு விண்வெளி ஆய்வு வரலாற்றிலே மிகச்சிறந்த முன்னேற்றமாக விஞ்ஞானிகளே வியக்கின்றனர்.
மாசசூசெட்ஸ் தொழில்கல்வி நிறுவனத்தில் இந்த கிரகங்களை பார்த்து மேலும், ஆய்வு செய்துவரும் சர்வதேச விஞ்ஞானிகள் குழு, சூரியனை பூமி சுற்றுவதுபோல, அந்த நட்சத்திரத்தையும் அந்த கிரகங்கள் சுற்றுகின்றன.
ஆனால், அந்த நட்சத்திரம் வெப்பமின்றி குளிர்ந்தும் பிரகாசமான செந்நிற ஒளியுடனும் காணப்படுகிறது. அதற்கு, அந்த நட்சத்திரத்தை சுற்றியுள்ள அகச்சிவப்பு அடுக்கே காரணம்.
அந்த கிரகங்களின் அளவும் வெப்பநிலையும் உயிர்கள் வாழ தகுதியானது. மேலும், ப்ரவுன் நிறத்தில் ஒளிரும் அந்த நட்சத்திரம் சூரியனில் எட்டில் ஒரு பகுதி நிறையுடையது.
மறையாத, உறுதியான சமிஞைகள் அந்த சிவப்பு நட்சத்திரத்தில் இருந்து பெறப்படுவதால், வாழத்தக்க உலகங்களின் பிரதான இலக்குகள் அங்கு நிச்சயம் இருக்க வேண்டும் என வானியல் வல்லுனர் லீஜ்(Liege) வாதிடுகிறார்.
மேலும், அந்த நட்சத்திரம் ஒரு ஒழுங்கான கால இடைவெளியில், மறைந்து பின் தோன்றுகிறது. அது நட்சத்திரத்துக்கும் பூமிக்கும் இடையில் பல பொருள்கள் இங்கும் அங்குமாக செல்வதை உணர்த்துவதாக உள்ளது.
சுழற்சியின்போது, கிரகங்களுக்குள்ளும் நட்சத்திரத்துடனுமான நேரும் நேர்க்கோட்டு சந்திப்பு வெவ்வேறு காலங்களில் நடக்கிறது.
நட்சத்திரத்துக்கு மிக அருகாமையில் உள்ள இரண்டு கிரகங்கள் 1.5 நாள் மற்றும் 2.4 நாளில் சுற்றி முடிக்கின்றன. மூன்றாவது கிரகம் கேள்விக்குறியாக உள்ளது. அதற்கு 4 லிருந்து 73 நாட்கள் வரை ஆகலாம்.
ட்ராப்பிஸ்ட்-1 நட்சத்திரத்தை சுற்றிலும் மேலும் 60 குள்ள நட்சத்திரங்கள் காணப்படுவதாக பெல்ஜியம், லீஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மைக்கேல் கில்லான் கூறுகிறார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பாக, அந்த இரண்டு கிரகங்களில் போக்கு மற்றும் வரத்து என இருமுறையிலும் எடுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் பதிவில், அவற்றின் உள் சுற்றுச்சூழலின் தன்மையும் கணிக்கப்பட்டுள்ளது. அதன் ஸ்பெக்ட்ரமும் எதிர்பார்த்தபடி கிடைத்துள்ளது என்கின்றனர்.
மேலும், கிரகத்துக்குள் செல்லும் ஒளியின் அலைநீளத்தில் (Wavelength) நிறைய மாறுபாடுகள் ஏற்படுவதால், அங்கு ஒளியும், பெரிய மற்றும் அடர்த்தியான கார்பன் டை ஆக்ஸைடு அதிகமுள்ள வளிமண்டலமும், அடர்த்தியான மேகங்களும் இருக்கக்கூடும்.
அது பூமி, செவ்வாய், வியாழன் கிரகத்தைப் போல சுற்றுச்சூழல் கொண்டது என்பதை ஆய்வுகள் உறுதிசெய்கிறது. அங்கு வாழ்பவர்கள் வாழ்க்கைமுறையும் பூமியில் இருப்பதுபோல, பெரிய தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட கலாசாரமாக இருக்கும்.
அந்த கிரகத்தின் உட்பகுதி சுற்றுச்சூழலை மேலும் ஆராய்வதற்கு, இன்னும் துல்லியமான, பெரிய இடவசதிகள் கொண்ட தொலைநோக்கிகளை உருவாக்குவது சர்வதேச விஞ்ஞானிகள் குழுவின்
அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இருக்கும் என டாக்டர் டி விட் கூறுகிறார்.
அங்கு வேற்றுக்கிரக வாசிகள் இருந்தால், மனிதர்களைவிட சக்தி மிக்கவர்களாகவே நிச்சயம் இருப்பார்கள். எப்படி என்கிறீர்களா?
பூமியின் துணை கிரகமான நிலவுக்கே சமீப காலத்தில்தான் நாம் சென்றிருக்கிறோம். ஆனால், 40 ஒளி ஆண்டுகள் தூரத்திலிருந்து நம் பூமிக்கு விதவிதமான பறக்கும் தட்டுகளில் வந்து அடிக்கடி பயமுறுத்துகிறார்களே அவர்களுடைய விஞ்ஞான வளர்ச்சி எவ்வளவு சக்திகொண்டதாக இருக்கும். அது அவர்களின் சுய சக்திக்கும் சான்று.